டிஎன்பி பங்கு பரிவர்த்தனை இரத்து

1 powerமின்கட்டண உயர்வு எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் என்பதால் அதன் பங்குகளின் பரிவர்த்தனையை நிறுத்தி வைக்குமாறு தெனாகா நேசனல் பெர்ஹாட் மலேசிய பங்குச் சந்தையைக் கேட்டுக்கொண்டிருக்கிறது. மாலை 5மணிவரை டிஎன்பி பங்கு பரிவர்த்தனை இரத்துச் செய்யப்பட்டிருக்கும்.

மின்கட்டண உயர்வு பற்றி எரிபொருள், பசுமைத் தொழில்நுட்பம், நீர்வள அமைச்சர் மெக்சிமஸ் ஒங்கிலி இன்று நாடாளுமன்றத்தில் செய்தியாளர் கூட்டமொன்றை நடத்துகிறார்.