கிழக்குக் கரை நெடுஞ்சாலை 2 தாமதத்தால் செலவு ரிம800 மில்லியன் கூடியது

1 highwayகிழக்குக் கரை நெடுஞ்சாலையைக் கட்டிமுடிப்பதில் ஏற்பட்ட தாமதத்தால்  செலவு ரிம800 மில்லியன் கூடி உள்ளது. இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கையின் இரண்டாம் பகுதி இதைத் தெரிவிக்கிறது.

கெமாமான், ஜாபுரையும் கோலா திரெங்கானுவில் கம்போங் கெமுரு-வையும் இணைக்கும் அந்த 184கி.மீ. சாலையைக் கட்டும் திட்டத்துக்கு 2006-இல் ஒப்புதல் அளிக்கப்பட்டது. நெடுஞ்சாலை கட்டும் திட்டம் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டது. ஒரு பகுதி மலேசிய நெடுஞ்சாலை நிறுவனத்திடமும் மற்றொரு பகுதி பொதுப்பணி அமைச்சிடமும்(ஜேகேஆர்) ஒப்படைக்கப்பட்டது.

120கி.மீ. சாலையை அமைக்கும் பணி ஜேகேஆருடையது. ரிம2.09பில்லியன் செலவில் 2009, மார்ச்சுக்குள் அதைக் கட்டிமுடிக்க திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், அதன் கட்டுமானத்தில் ஏற்பட்ட தாமதங்களின் காரணமாக கடந்த டிசம்பர் வரை செலவுத் தொகை ரிம2.9 பில்லியனாகக் கூடியுள்ளது.