மகாதிர்: மலேசிய ஜனநாயகம் குறைபாடற்றது அல்ல

1 dr mமுன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், மலேசிய ஜனநாயகம்  “அப்பழுக்கற்றது அல்ல” என்பதை ஒப்புக்கொள்கிறார். ஆனாலும் மக்கள் தெருவில் போராட்டம் நடத்துவதைவிட இது மேலானது.

“மலேசிய ஜனநாயகம் குறைபாடற்றது அல்லதான். ஆனாலும், மக்கள் தெருக்களில் அடித்துக்கொண்டு சாவதைவிட குறைபாடுடைய ஜனநாயகம் மேலானது”.

குறைபாடுகள் இருந்தாலும் மலேசியாவில் ஜனநாயகம் நிலைத்து நிற்கிறது என்றாரவர்.