2014-இல் மின்கட்டணம் 15 விழுக்காடு உயரும்

1-maximusஎதிர்பார்க்கப்பட்டதுபோல் மின்கட்டணம் உயரும் என்ற ஊகம் உண்மையாகியுள்ளது. அடுத்த ஆண்டிலிருந்து அது 15 விழுக்காடு உயர்கிறது அதாவது ஒரு கிலோவாட் 4.99 சென் உயர்ந்து 38.53 சென்னாகும்.

இன்று, நாடாளுமன்றத்தில் செய்தியாளர் கூட்டமொன்றில் எரிபொருள், பசுமைத் தொழில்நுட்பம், நீர்வள அமைச்சர் மெக்சிமஸ் ஒங்கிலி இதை அறிவித்தார்.

இதற்குமுன் ஒரு கிலோவாட் 33.54 சென்னாக இருந்தது.

சாபாவிலும் லாபுவானிலும் ஒரு கிலோவாட் 16.9 விழுக்காடு அதாவது 5 சென் உயர்வு காணும்..