அரசு ஊடகங்கள் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுவதைக் காண்பிக்க, பெர்னாமா டிவி, பெர்னாமா-அல்லாத கட்சிகளின் கூட்டங்கள் பற்றிய செய்திகளையும் ஒளிபரப்ப ஊக்குவிக்கப்படுகிறது.
“டிஏபி-இடம் அதன் மத்திய செயலவை மறுதேர்தல் பற்றிய செய்திகளைச் சேகரிக்க அனுமதி கேட்கும்படி பெர்னாமா டிவியிடம் கூறினேன்”, என நேற்றிரவு மக்களவையில் தொடர்பு, பல்லூடக அமைச்சர் அஹ்மட் ஷபரி சிக் கூறினார்.
“பாஸ் மாநாட்டில் (பாஸ் தலைவர்) அப்துல் ஹாடி ஆவாங் பேசியதை ஒளிபரப்பியதற்கு நான் மறுப்பு தெரிவிக்கவில்லை”, என்றவர் சொன்னார்.
“இன்னும் இரண்டு, மூன்று ஆண்டுகளில்” ஆர்டிஎம், கூடுதல் அலைவரிசைகளைப் பெற்றதும் நாடாளுமன்ற விவாதங்கள் ‘நேர்டியாக’ ஒளிபரப்பு செய்யப்படலாம் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
அதைத்தான் சில வேளைகளில் நன்கு செய்து வருகிறீர்களே…! அவர்கள் நிகழ்வுகளில் அவர்களுக்கு பாதகமான ஏதாவது செய்தி கிடைக்குமா என கழுகுபோல் காத்திருந்து, கிடைத்ததும் உடனே டிவி 1, 2, 3, பெர்னாமா என எல்லாவற்றிலும் திரும்ப2 3, 4 நாட்களுக்குக் காட்டிக்கொண்டே இருப்பீர்களே… அது போதாதா…?!