ரித்வான் டீ ‘இன ஒழிப்பு’மீது பாடம் நடத்தினாரா என்று விசாரிக்கப்படும்

1-mindefயுனிவர்சிடி பெர்தஹான்  நேசனல் மலேசியா விரிவுரையாளர் ரித்வான் டீ, பல்கலைக்கழகத்தில் இன ஒழிப்பு பற்றி பாடம் நடத்தியதாகக் கூறப்படுவதைத் தற்காப்பு அமைச்சு விசாரிக்கும்.

இதனைத் தெரிவித்த தற்காப்பு துணை அமைச்சர் அப்துல் ரஹிம் பக்ரி, உண்மைகளின் அடிப்படையில் இன ஒழிப்பு விவகாரங்கள் பற்றி விவாதித்திருந்தால் அதில் தப்பில்லை என்றார்.

“இது பற்றி விசாரித்து பிறகு தகவல் தெரிவிப்போம்”, என்றாரவர்.

தெரேசா கொக்(டிஏபி- சிபூத்தே) டீ, “வகுப்பில் மாணவர்களுக்கு இன ஒழிப்புப் பற்றிப் பாடம் நடத்தியது”, உண்மையா என வினவியதற்குப் பதிலளித்தபோது அப்துல் ரஹிம் இவ்வாறு கூறினார்.