நஜிப் எம்ஏசிசி சுதந்திரமாக செயல்பட வகைசெய்யும் சட்டம் கொண்டுவரத் தயார், ஆனால்……..

1 najibபிரதமர் நஜிப் அப்துல் ரசாக், மலேசிய ஊழல்தடுப்பு  ஆணையம்  சுதந்திரமாக செயல்பட வகைசெய்யும் சட்டமுன்வரைவை, “2014-இல் நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்திலேயே கொண்டுவரத் தயாராக இருக்கிறார்.

ஆனால், ஒன்று.  அதற்கு மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு கிடைக்கும் என்ற உத்தரவாதம் இருந்தால் மட்டுமே அதைக் கொண்டு வர முடியும்.  இன்று,  இருதரப்பும் அடங்கிய நாடாளுமன்றக் குழுவிடம் பேசியபோது நஜிப் இவ்வாறு கூறினார்.

அதாவது 89 எம்பிகளைக் கொண்டுள்ள பக்காத்தான் ரக்யாட்டும் அதற்கு ஆதரவளிக்க வேண்டும். அப்போதுதான் பிரதமர் அதைக் கொண்டுவருவார் எனக் குழுத் தலைவர் அபு ஸ்கார் ஊஜாங் கூறினார்.