பூஜாங் பள்ளத்தாக்கில் பழங்கால கோயில் தரைமட்டமாக்கப்பட்டதற்கு மத்திய அரசே பொறுப்பு

1 bujangபூஜாங் பள்ளத்தாக்கில் 8ஆம் நூற்றாண்டு கோயில் ஒன்றைத் தரைமட்டமாக்கிய வீடமைப்பு நிறுவனத்துக்கு அங்கு மேம்பாட்டுப் பணி மேற்கொள்ள ஒப்புதல் அளித்தது மத்திய அரசுதான்   என பாஸ் கூறியது.

வரலாற்றுச் சின்னங்களைக் கொண்டுள்ள அந்த நிலத்தை வாங்குவதற்கு மட்டுமே அப்போதிருந்த பாஸ் தலைமையிலான மாநில அரசு உதவியது என அதில் ஆட்சிக்குழு உறுப்பினராக இருந்த டாக்டர் ஹம்டான் காலிட் கூறினார்.

“கூட்டரசு அரசாங்கத்துக்காக அந்த நிலத்தை அகப்படுத்தவும் அதை விற்பதற்கும் ஒப்புதல் அளித்தோம்….அதைத்தான் எங்களால் செய்ய முடியும்……மற்றவை எல்லாம் மத்திய அரசின் (தேசிய பாரம்பரியத் துறை) கண்காணிப்பில்தான் இருந்தன”, என்று ஹம்டான் மலேசியாகினிக்கு அனுப்பிய மின்னஞ்சலில் குறிப்பிட்டார்.

அங்கு திட்டங்களைக் கண்காணிப்பதில் மாநில அரசுக்குத் தொடர்பில்லை என்றாரவர்.