நிதி முழுமையாக பயன்படுத்திக் கொள்ளப்படாதது ஏன்? சிலாங்கூர் விளக்க வேண்டும்

1 auditசிலாங்கூர் மாநிலத்தில் சாலைப் பராமரிப்புக்குக் கூட்டரசு அரசாங்கம் கொடுத்த நிதி சரியாகப் பயன்படுத்திக் கொள்ளப்படவில்லை. அரைகுறையாகவே பயன்படுத்திக் கொள்ளப்பட்டிருக்கிறது.

“சாலைப் பராமரிப்புக்காக மத்திய அரசு வழங்கிய நிதி ஏன் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளப்படவில்லை என்பதை சிலாங்கூர் அரசு விளக்க வேண்டும்”, என டிஏபி பூச்சோங் எம்பி கோபிந்த் சிங் டியோ ஓர் அறிக்கையில் வலியுறுத்தி இருந்தார்.

2012 தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கையில்  சாலைப் பராமரிப்புக்காகக் கொடுக்கப்பட்ட ரிம1.14 பில்லியனில் 53 விழுக்காட்டை மட்டுமே சிலாங்கூர் அரசு பயன்படுத்திக் கொண்டது எனக் குறிப்பிட்டிருப்பதன் தொடர்பில் கோபிந்த் இவ்வாறு கூறினார்.

“சிலாங்கூரில் மாநிலச் சாலைகளும் கூட்டரசு சாலைகளும் தரமாக இல்லை என்ற அதிருப்தி உண்டு.

“அப்பிரச்னைக்கு நிதிப்பற்றாக்குறை காரணம் அல்ல என்பது தெரிகிறது. போதுமான நிதி இருக்கிறது” என்றாரவர்.