மேம்பாட்டாளருக்கு 1,000ஆண்டு பழைமையான சண்டி இருப்பது தெரியாதாம்

1 candiபூஜாங் பள்ளத்தாக்கில் ஆயிரமாண்டு பழமைவாய்ந்த சண்டி ஒன்றைத் தரைமட்டமாக்கிய பண்டார் செளஜானா சென். பெர்ஹாட்டுக்கு அங்கு அப்படி ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சின்னம் இருப்பது தெரியாதாம்.

“செப்டம்பரில் நிலத்தைத் துப்புரவுபடுத்துமுன்னர் அந்த இடத்தைப் பார்வையிட சென்றிருந்தோம். ஒரு கல் கட்டுமானத்தைப் (சண்டி) பார்த்தோம். அது என்ன என்பது எங்களுக்குத் தெரியாது”, என அந்நிறுவனத்தின் மேலாளர் சாவ் குவான் கியாட் கூறியதாக த ஸ்டார் இன்று அறிவித்திருந்தது.

“அது வரலாற்றுச் சிறப்புமிக்க சின்னம் என்பதை அறிந்திருந்தால்  அகற்றி இருக்க மாட்டோம்”, என்றாரவர்.