ஜிஎல்சிகளில் கூடுதல் இடம் தேவை-அம்னோ மகளிர்

1 wanitaஅரசாங்கத்திலும், அரசுசார்பு நிறுவனங்களிலும்(ஜிஎல்சி), மாநில அம்னோ தொடர்புக் குழுக்களிலும் மகளிருக்குக் கூடுதல் இடங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்று  அம்னோ மகளிர் தலைவர் ஷரிசாட் அப்துல் ஜலில் விரும்புகிறார்.

.“மாநில தொடர்புக்குழுக்களில் செயலாளர்களாக, பொருளாளர்களாக இருக்கும் தகுதி எங்களுக்கு இல்லையா?

“ஜிஎல்சி-களில் இயக்குனர்களாக, தலைவர்களாக இருக்கும் தகுதி பெண்களுக்கு இல்லாமல் போய்விட்டதா?”, என்று ஷரிசாட்  வினவினார்.

அம்னோ மகளிர் கூட்டத்தில்   உரையாற்றிய அவர்,   பட்டப்படிப்புப்  பயின்ற  இன்றைய  மகளிர்  அப்பொறுப்புகளை  ஏற்க  முற்றிலும் தகுதியானவர்களே என்றார்