பெரும்பாலோர் நினைப்பதுபோல் சுயேச்சை மின் உற்பத்தியாளர்களுக்கு (ஐபிபி) எரிபொருள் உதவித் தொகை வழங்கப்படுவதில்லை. எரிபொருள், பசுமைத் தொழில்நுட்பம், நீர்வள அமைச்சின் மூத்த இயக்குனர் அஸ்ஹார் ஒமார் இதனைத் தெரிவித்தார்.
ஐபிபிகளுக்கு எரிபொருள் வழங்கும் தெனாகா நேசனலே (டிஎன்பி) எரிபொருளுக்கான செலவையும் ஏற்றுக்கொள்கிறது. இதனால் பயனீட்டாளர்களுக்கு மலிவு விலையில் மின்சாரம் கிடைக்கிறது என நாடாளுமன்றத்தில் ஒரு சிறப்பு விளக்கமளிப்புக் கூட்டத்தில் அவர் கூறினார்.
எனவே, ஐபிபிகளுக்கு உதவித் தொகை வழங்கப்படுவதாக நினைத்துக் கொண்டிருப்பது ஒரு தப்பான கருத்து என்றாரவர்.
இந்த பெரிய உண்மையை ஏன் இவ்வளவு நாள் மக்களுக்குத் தெரியாமல் மறைத்து வைத்து இருந்தீர்கள்?! BN ஆட்சியில் எல்லாமே மூடு மந்திர வேலைதானா..?!
அது இருக்கட்டும், IPP களுக்கான எரிபொருள் செலவை ஏன் TNB ஏற்றுக்கொள்ள வேண்டும்?! அப்படினா IPP களுக்கு மக்கள் பணத்தில் முறையற்ற வகையில் எரிபொருள் விநியோகம் செய்யப்படுகிறது என்பதுதானே பொருள்..?! ( TNB ஒரு GLC. ஆக, அது மக்கள் சொத்து தானே?! ) இது மகாதீர் பண்ணுன அனேக கெட்ட வேளைகளில் ஒன்னு. நீங்கள் சொல்லர பதில்கள் எப்பவுமே இன்னும் கூட கொலபத்தை உண்டு பண்ணுதுங்க…, உண்மையிலேயே…!
ஐ பி பிக்கும் தி என் பிக்கும் இடையில் மேற்கொண்ட ஒப்பந்தத்தை பொது மக்களுக்கு வெளியிட முடியுமா???? அல்லது நாடாளுமன்றத்திலாவது விவாதிக்க முடியுமா???