அரசியல் தொடர்புடைய குண்டர்கள் என்ஜிஓ கூட்டத்தைக் கலைத்தனர்

1 hindrafகூலிக்கு அமர்த்தப்பட்ட குண்டர்கள் தங்கள் கூட்டத்தில் புகுந்து கலகம் செய்ததாக மலேசிய இண்ட்ராப் சங்கம் போலீசில் புகார் செய்துள்ளது. அவர்களுக்கு பினாங்கின் உயர் அரசியல்வாதிகளுடன் தொடர்பு இருக்கலாம் எனவும் அது கூறியது.

நவம்பர் 30-இல், ஜாலான் உத்தாமாவில் உள்ள கேரிங் சொசைடியில் சில என்ஜிஓகள்  கூட்டம்  நடத்திக் கொண்டிருந்தபோது  குண்டர்கள் புகுந்து கலகம் செய்தனர்  என  இண்ட்ராப் தேசிய ஆலோசகர் என். கணேசன் இன்று  செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அவர்கள்  “அடிவிழும்” எனத் தம்மை எச்சரித்ததுடன்  பினாங்கு இந்து அறவாரியத்தால் நடத்தப்படும் மின்சுடலைகள் நல்லபடியாக நிர்வகிக்கப்படாதது குறித்து முதலமைச்சர் லிம் குவான் எங்குக்கும் துணை முதல்வர் பி.இராமசாமிக்கும் என்ஜிஓ கூட்டம்  மகஜர் அனுப்பி வைப்பதையும் தடுக்க முயன்றனர் என கணேசன் கூறினார்.

பத்து லஞ்சாங்கில் உள்ள அம் மின்சுடலைகள் ஆறு மாதங்களாக செயல்படவில்லை என்றும் பிணங்களைத் திறந்த வெளியில்தான் எரிக்க வேண்டியுள்ளது என்றும் கூறப்படுகிறது.

குண்டர்களில் ராஜேந்திரன் என அழைக்கப்படும் ஒருவரின் பேச்சு அவர்களுக்கு லிம்முடனும் இராமசாமியுடனும் தொடர்புண்டு என்பதைக் காட்டிக் கொடுத்ததாம் .  கணேசன் குறிப்பிட்டார்.