மின்கட்டண உயர்வு மிக அதிகம்: அம்னோ இளைஞர்கள் சாடல்

1 khairiமின்கட்டணத்தை உயர்த்தும் முடிவு தெனாகா நேசனல் பெர்ஹாட்டின் (டிஎன்பி) ஆதாயத்தைப் பெருக்கும் ஒரு திட்டம் என இளைஞர், விளையாட்டு அமைச்சர் கைரி ஜமாலுடின் சாடினார்.

எரிபொருளுக்காகும்  செலவுக்கும்  மின்கட்டண உயர்வுக்கும் பொருத்தமில்லை  என கைரி குறிப்பிட்டார்.

“நான் அமைச்சரவை முடிவுக்குக் கட்டுப்பட்டவன்தான். ஆனாலும் (அம்னோ) இளைஞர் தலைவர் என்ற முறையில் அதிருப்தியைத் தெரிவிப்பது அவசியம் என நினைக்கிறேன். அமைச்சரவையிலும் தெரிவித்தேன்”, என்றாரவர்.

“எரிபொருள் விலை உயர்ந்து வருகிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், டிஎன்பி-இன் ஆதாயமும் உயர்ந்துதானே இருக்கிறது”, என்றவர் சொன்னார்.

கூட்டரசு பிரதேச அம்னோ மகளிர் பேராளர் அசிசா ஷாரியும் மின்கட்டண உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்தார். கடந்த ஆண்டு பில்லியன் கணக்கில் ஆதாயம் கண்ட தெனாகா, மின்கட்டணத்தை உயர்த்துவது அநியாயம் என்றார்.