மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக், தாம் ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிப்படி கட்சித் தேர்தலில் போட்டிடப்போவதில்லை என்பதை இன்று உறுதிப்படுத்தினார்.
13வது பொதுத் தேர்தலில் மசீசவின் தோல்விக்குப் பொறுப்பேற்கும் வகையில் மே 6-இல் சுவா அவ்வாறு வாக்குறுதி அளித்திருந்தார்.
சொன்ன சொல்லைக் காப்பாற்ற வேண்டும். அதே நேரத்தில் சரியான நேரத்தில் பதவியிலிருந்து இறங்குவதுதான் விவேகமான செயலாகும் என்றாரவர்.
“கட்சித் தேர்தலில் நின்று வெற்றிபெற்றால் என் நேர்மையும் நம்பகத்தன்மையும் கெடும். அந்த வெற்றிக்கும் அர்த்தமில்லாமல் போய்விடும்.
“சொன்னதைச் செய்பவன் என்ற பெயருடன் நிமிர்ந்த தலையுடன் விலகிக் கொள்ள விரும்புகிறேன்”, என சுவா கூறினார்.