அம்னோ பேரவையில் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் காட்சி அளித்தார்- காணொளி உருவில். 13வது பொதுத் தேர்தலில் வங்காள தேசிகள் வாக்களித்தனர் என்று அன்வார் கூறுவதைக் காண்பிக்கும் காணொளி ஒன்றை அம்னோ தலைவர் நஜிப் அப்துல் ரசாக் பேராளர்களுக்குத் திரையிட்டுக் காண்பித்தார்.
இணைய செய்தித்தளங்களிலிருந்தும் இதர மூலங்களிலிருந்தும் திரட்டப்பட்ட காணொளிகளையும் செய்திகளையும் கொண்டு தயாரிக்கப்பட்ட ஒரு நிமிடம் ஓடும் அக்காணொளியில், 40,000 ஆவி வாக்காளர்கள் வாக்களிப்பதற்கென்றே மலேசியாவுக்குள் விமானங்களில் கொண்டு வரப்பட்டதாக அன்வார் கூறுகிறார். ஆனால், வாக்காளர்கள் யார் என்பதை அவர் குறிப்பிடவில்லை.
அதன் பின்னர், கினிடிவியில் காண்பிக்கப்பட்ட அன்வார் ஒரு செராமாவில் பேசும் காட்சி வருகிறது. அதில் அவர், வங்காள தேசிகளும் இந்தோனேசியர்களும் வாக்களித்ததால்தான் பிஎன் வென்றது எனக் கூறுகிறார்.
அவர் தவறாக ஒன்றும் சொல்லவில்லையே…..