மலேசிய இண்ட்ராப் இயக்க ஆலோசகர் என்.கணேசன், பினாங்கில் என்ஜிஓ-களின் கூட்டத்தில் கூலிக்கு அமர்த்தப்பட்ட குண்டர்கள் புகுந்து கலகம் செய்ததாக திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருந்தாரானால் அவர்மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கை விடுத்திருப்பவர் ஒரு சாப்பாட்டுக் கடை உரிமையாளரான இரேகேந்திரன் சிவசாமி,58.
கூட்டத்தில் கலகம் செய்த குண்டர்களுக்கு பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்குடனும் துணை முதலமைச்சர் பி.இராமசாமியுடனும் தொடர்பு உண்டு என்று கூறிய கணேசன், அதற்கு ஆதாரமாக இராகேந்திரன், இராமசாமியுடன் இருக்கும் நிழற்படத்தைக் காண்பித்திருக்கிறார்.
கணேசன் “கூலிக்கு அமர்த்தப்பட்ட குண்டன்” என்று கூறி தம்மை அவமதித்திருக்கிறார் என்று ஆத்திரப்பட்ட இராகேந்திரன், தாம் அரசியல்வாதிகளின் கையாளும் அல்ல, குண்டர்கள் கூட்டத்தைச் சேர்ந்தவனும் அல்ல என்றார்.
“கணேசனும் இண்ட்ராப் இயக்கத்தினரும் என் பெயரைக் கெடுத்து விட்டார்கள். இந்தக் குற்றச்சாட்டுகள் என் தொழிலைப் பாதிக்கும். அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கலாமா என வழக்குரைஞர்களிடம் ஆலோசனை கேட்கப் போகிறேன்”, என இராகேந்திரன் கூறினார்.
கணேசன் பேச்சால் ஆத்திரமடைந்துள்ள இன்னொருவர் வழக்குரைஞரும் டிஏபி ஸ்ரீடெலிமா சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.எஸ்.என்.இராயர்(வலம்) . அது தீய நோக்கத்துடன் கூறப்பட்ட குற்றச்சாட்டு என்றாரவர்.
“கணேசன் அதைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தால் அவர்மீது சட்ட நடவடிக்கை எடுப்பது பற்றி ஆலோசிப்போம்”, என்று இராயரும் எச்சரித்தார்.
கணேசன் ஒரு முறை தானே சொன்னாரு? பிறகு என்ன இருவரும் மீண்டும் மீண்டும் என்று பிதற்றுகின்றனர்? யாரோ சொல்லி கொடுத்தார் போல ஒரே வசனத்தை பேசுகின்றனர்… என்ன கதை?
கணேசனுக்கு வாய்க்கொழுப்பு ஜாஸ்தி ,,இந்த ஆளுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும்
பகதான் ரக்யாடின் பேச்சு சுதந்திரம் மிகவும் அருமை. அடியாட்கள் வைத்து மிரட்டுவது, வெளியே சொன்னால் சட்ட நடவடிக்கை எடுப்பேன் என்று மிரட்டுவது… சூப்பர்!!! UBAH!!!
சார், கோச டின் ரொம்ப சத்தம் கொடுக்கும் ஆனால் வேலைக்கு ஆகாது. சட்டம் நடவடீகை எடுப்பாங்க, ஆனால் எடுக்க மாட்டங்க.
ஆதாரம் இல்லாமல் குற்றம் சொன்னால் கண்டிப்பாக சட்ட நடவடிக்கை எடுப்பது சரிதானே. நஜிபுடன் செய்த ஒப்பந்தத்தை நடைமுறை படுத்த பாருங்கள் . அதை விடுத்து படம் காட்டிக்கொண்டு இருக்க வேண்டாம் எவனும் கிழிக்க முடியாததை கிழிக்க பாருங்கள்
ஆதாரமில்லை என்றால் நடவடிக்கை எடுக்காமல் ஏன் புசாண்டி காட்ட வேண்டும்? இதிலிருந்தே தெரிகிறதே, கணேசன் சொல்வதில் உண்மை உள்ளது என்று. ஜசெக அரசியல் அநாகரிகம் புரிந்தால் ஆதரிக்கும் அதன் ஆதரவாளர்களால் சமுதாயத்திற்கு தான் கேடு.
வேதாளத்துக்குப் பின்னால் இருக்கும் இந்த இண்ட்ராப் வெக்கெங்கெட்ட பச்சோந்திகள், பரதேசிகள் செய்யும் கூட்டத்திற்குச் சென்று ஏன் நேரத்தை வீணடிக்கிறீர்?