கேஎல் சொத்து மதிப்பீட்டு வரிக்கு எதிராக மக்கள் பேரணி: பக்காத்தான் நடத்துகிறது

1 dbklகோலாலும்பூர் மாநகராட்சி மன்றம் (டிபிகேஎல்)  நியாயமற்ற முறையில்  சொத்து மதிப்பீட்டு வரியை உயர்த்தியிருப்பதற்கு எதிர்ப்புத்  தெரிவிக்க  டிசம்பர் 16-இல்  ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் பேரணிக்கு மக்கள்  திரண்டு வர வேண்டும்.

நாடாளுமன்ற  வளாகத்தில்  செய்தியாளர்களிடம் பேசிய தலைநகர் பக்காத்தான்  ரக்யாட் எம்பிகள் அந்த வேண்டுகோளை விடுத்தனர்.

கண்டனக் கூட்டம் நடப்பதை மனத்தில் பதிய வைத்துக்கொள்ள வேண்டும் என  பத்து எம்பி தியான் சுவா வலியுறுத்தினார்.

அதே வேளை சொத்து மதிப்பீட்டு வரி உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் பாரங்களையும் மக்கள் மறவாமல் டிபிகேஎல்லுக்கு அனுப்ப வேண்டும்.

“அந்தப் பாரங்களை அனுப்பாவிட்டால், மக்களில் பெரும்பாலோர் வரி உயர்வை  ஏற்கிறார்கள் என்று சொல்வார்கள்”,  என்றாரவர்.

டிசம்பர் 16-இல், டாட்டாரான் டிபிகேஎல்-இல் காலை மணி 11-க்கு பேரணி நடக்கும் தகவலைக்  குடியிருப்பாளர் சங்கத் தலைவர்கள் மக்களிடம்  பரப்ப  வேண்டும் எனவும் அந்த எம்பிகள் கேட்டுக்கொண்டனர்.