என்ஜிஓ: ஆஸ்ட்ரோவின் ஏகபோக உரிமைக்கு முடிவு கட்டுவீர்

1 astroகூடுதல் கட்டணம் வசூலித்துக் கொண்டு மட்டரகமான நிகழ்ச்சிகளை ஒளியேற்றும் ஆஸ்ட்ரோ தொலைக்காட்சியின் ஏகபோக உரிமைக்கு  முற்றுப்புள்ளி  வைக்க வேண்டும்  என சொலிடேரிடி அனாக் மூடா (எஸ்ஏஎம்எம்)  வலியுறுத்தியுள்ளது.

அந்த  என்ஜிஓ-வின் ஐந்து உறுப்பினர்கள் சேர்ந்து  ‘Bantah Astro’  அணி ஒன்றை ஏற்படுத்தியுள்ளனர்.  அவர்கள்  இன்று  தொடர்பு, பல்லூடக அமைச்சிடம்  மகஜர் ஒன்றை ஒப்படைத்தனர்.

அம்மகஜரை அவர்களிடமிருந்து எதிரணி எம்பிகள் , நாடாளுமன்றத்துக்கு வெளியில் பெற்றுக்கொண்டனர்.

“ஆஸ்ட்ரோவின் ஏகபோக உரிமையால் அரசாங்கத்துக்கு வேண்டியவர்கள்தான்  ஆதாயம் காண்கிறார்கள். அதன் சேவை மகா மட்டமானது.

“ஆஸ்ட்ரோ விருப்பம்போல் கட்டணத்தை உயர்த்த அரசாங்கம் அனுமதிக்கக்கூடாது”,  என எஸ்ஏஎம்எம் பேச்சாளர் கைருல் அன்வார் அல்-மேகாட் கூறினார்.