செர்டாங் மருத்துவமனையில் உள்கூரை மீண்டும் இடிந்து விழுந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2011 தொடங்கி ஐந்தாவது தடவையாக அங்கு கூரை இடிந்து விழுந்திருக்கிறது.
நேற்று பிற்பகல், மருத்துவமனையில் ஆபத்து அவசர சிகிச்சை பிரிவில் தாதியர் முகப்புப் பகுதியில் அச்சம்பவம் நிகழ்ந்ததாக மலாய்மொழி நாளேடான உத்துசான் மலேசியா செய்தி வெளியிட்டிருந்தது.
அப்பகுதியில் நோயாளிகள் இருப்பதாக அச்செய்தி கூறிற்று. ஆனால், சம்பவத்த்ன்போது யாரும் காயமடையவில்லை.
marutthuvamanaiye இடிந்து விழுந்தாலும் யார் மேலேயும் நடவடிக்கை எடுக்கப் பட மாட்டாது. ஏன்? ஏன்? ஏன்? அம்னோ அம்னோ அம்னோ குரோணி. இதுதான் அன்பு பிதாமகனின் தாரக மந்திரம், மக்களை முன்னிறுத்தும் லட்சணம்.
சுப்ரமணியரே, தானைத்தலைவரைப் போல் அரசியல் நடத்தக் கற்றுக் கொள்ளுங்கள். அவராக இருந்தால், இந்நேரத்துக்கு, அம்மருத்துவமனை முற்றிலும் ஆராய்ந்து, மருத்துவமனையின் கூரை முற்றிலும் கரையான் அரித்து விட்டது. ஆதலால், அவற்றை மாற்றவும், கரையான் மருந்து தெளிக்கவும் RM50M -க்கு ஒரு புரோஜெக் போட்டு அதில் RM5M கமிசென் பேசி முடித்திருப்பார். பிழைக்கத் தெரியாம மந்திரி பதவியில் இருந்து என்ன பயன்? அரசியல் அரிச்சுவடியை மீண்டும் திருப்பிப் பாருங்கள். அரசியலில் வாழ கற்றுக் கொள்ளுங்கள். சோமாரியாக இருக்காதீர்கள்.
தேனீ அவர்களே, ப்ராஜெக்ட் போட சிந்திப்பதெல்லாம் சொந்த நாற்காலிக்கு கரையான் மருந்து தெளிக்கும் ‘லெவலுக்கு’ மட்டும்தான். மில்லியன் பில்லியன் கணக்கில் சிந்திக்க தெரிந்திருந்தால் நம் சமூகத் தலைவர்கள் ஏன் இன்னும் வால் பிடுத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்? மற்றவர்களும் சிறப்பாக வாழ வழி செய்து தாங்களும் நற்பெயர் எடுத்திருப்பார்கள். தேர்தல் வெற்றியே ‘திடீர் மின்வெட்டு’ மூலமாக வந்தது. இவர்கள் எப்படி வானளவிற்கு சிந்திக்க முடியும்? விடுங்கப்பா…நம்ம பொழப்ப பார்ப்போம் ….
உள்கூரை மீண்டும் இடிந்து விழுந்ததற்கு அன்வார்தான் காரணம் என்று சொல்லிருவானுங்க்களே
குறுக்கு வழியில் கல்வி கற்ற சமுதாயத்தின் சாதனை இது.
ஆமா ஆமா ……குத்தகைகளை வளயாங்கட்டிகளுக்கு கொடுத்தால் எப்படி உருப்படும் ……..இப்படித்தான் இடியும் …….இந்தியன் ஒருத்தன் இப்படி செஞ்சிருந்தால் ….சும்மா விடுவானுங்களா இந்த கர்பால் மற்றும் குலா நாதாரிகள்…….
உள்கூரை மட்டும்தானே அடிக்கடி கழன்று விழுகிறது….! அடித்த ஆணியின் நீளம் 1/2 அங்குலம் குறைவாம். அதற்கு ஏன் இவ்வளவு கூச்சல்…?! மருத்துவமனையின் மற்ற பாகங்கள் பழுதடையாமல் இருக்கிகிறதே என நிம்மதியாக நிம்மதி கொள்ளுங்கள். இது மலேசியா. நடக்கக்கூடாதது எல்லாம் இங்கு நன்கே நடக்கும். நடக்கும் umNoB பொது பேரவையில் இது குறித்து தேச விசுவாசமிக்க மண்ணின் மைந்தர்கள் எவரும் கவலை கொள்ளாத போது மற்ற வந்தேறிகளுக்கு ஏன் வீண் ஆதங்கம்?! உங்கள் அடுப்பில் படுத்திருக்கும் பூனையை விரட்டப்பாருங்கள்.