ஜாஹிட்: வெள்ளம் தொடர்பில் அவசரகாலம் பிரகடனம் செய்ய வேண்டியதில்லை

1 floodகுவாந்தானில் வெள்ள நிலவரம் மோசமாக இருந்தாலும் அவசரகாலம் பிரகடனம் செய்ய வேண்டிய அவசியமில்லை என உள்துறை அமைச்சர் அஹமட் ஜாஹிட் ஹமிடி கூறினார்.

முந்திய ஆண்டுகளைவிட இவ்வாண்டு அங்கு வெள்ள நிலவரம் மோசமாகத்தான் உள்ளது என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.

“வெள்ள நிலை மோசமாகத்தான் உள்ளது. ஆனாலும், அவசரகாலம் பிரகடனம் செய்ய வேண்டிய அவசியமில்லை. போலீஸ், சிவில் தற்காப்புத் துறை ஆகியவையும் மற்ற துறைகளும் முடுக்கிவிடப்பட்டு உதவும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன”, என்றாரவர்.

இன்று, பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் நாளை, துணைப் பிரதமர் முகைதின் யாசினும் அங்கு சென்று பார்வையிடுவர் எனவும் அவர் தெரிவித்தார்.