சண்டி காணப்படும் அனைத்து இடங்களும் அரசாங்க கெஜட்டில் பதிவு செய்யப்பட்டால், கெடாவில் அம்னோ ஒரு தொகுதியை இழக்கும் என்று அம்னோ ஆண்டு பொதுக்கூட்டத்தில் நேற்று கூறப்பட்டது.
இதற்கான காரணம், இந்த சின்னங்கள் எல்லா இடங்களிலும் காணப்படுகின்றன, மக்களின் வீடுகளுக்கு கீழும் அவை இருக்கின்றன என்று கெடா மாநில பிரதிநிதியும் தஞ்சோங் டாவாய் சட்டமன்ற உறுப்பினருமான தாஜுல் உருஸ் மாட் ஸைன் கூறினார்.
“இவ்விடங்கள் பாரம்பரிய இடங்களாக கெஜட்டில் பதிவு செய்யப்பட்டால், நான் ஒரு தொகுதியை இழக்க வேண்டும் ஏனென்றால் இந்த சிறிய சண்டிகள் எங்குபார்த்தாலும் இருக்கின்றன, கம்போங் வீடுகளுக்கு கீழும், சாலை ஓரங்களிலும், எல்லா இடங்களிலும் இருக்கின்றன”, என்றாரவர்.
ஒரு வீட்டு மேம்பாட்டு திட்டத்திற்காக எட்டாம் நூற்றாண்டு காலத்திய தொல்பொருள் இடத்தின் ஒரு பகுதி என்று கூறப்படும் நிலத்தில் உடைக்கப்பட்ட சண்டி “ஒரு சிறிய விசயம் படுதோல்வியாக்கப்பட்டுள்ளது”, என்று அவர் கூறினார்.
உடைக்கப்பட்ட சண்டி ஆதியிலிருந்ததல்ல. அது புதுப்பிக்கப்பட்ட ஒன்றாகும் என்று கெடா ஆட்சிக்குழு உறுப்பினரான தாஜுல் மேலும் கூறினார்.
“நடந்தது என்னவென்றால், அந்த சண்டி 1974 ஆம் ஆண்டில் ஆற்று கற்பாறைகளைக் கொண்டு இரண்டு அடி உயரத்திற்கு மீண்டும் கட்டப்பட்டதாகும்”, என்றாரவர்.
ஆப்கானிஸ்தானில் உடைக்கப்பட்ட பாமியான் புத்த கட்டமைப்புகளோடு இந்த சண்டியை பாடாங் செராய் நாடாளுமன்ற உறுப்பினர் என்.சுரேந்திரன் ஒப்பிட்டது அரசியல் இலாபத்திற்காக விடுக்கப்பட்ட அறிக்கையாகும்.
“இது எறும்பை யானையுடன் ஒப்பீடுவதற்குச் சமமாகும்”, என்று அவர் கூறினார்.
பூஜாங் பள்ளத்தாக்கு இஸ்லாமிய கலாச்சாரத்திற்கு முந்தியாகும். இது மலாய் புராணக் கதை மற்றும் நாடோடிக்கதைகள் ஆகியவற்றின் ஓர் அங்கமல்ல என்று அவர் மேலும் கூறினார்.
“ஜெராய் மலையை உள்ளடக்கிய மெரோங் மகாவங்சா நிலை என்ன? சுற்றுப்பயண நலன் கருதி இது குறித்து பாரம்பரிய இலாகா கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்”, என்றாரவர்.
இது புராதனச் சின்னம் என்பதை அறிந்திராத மேம்பாட்டாளர் அந்த சண்டியை புதுப்பிப்பார் என்று மாநில அரசு கூறியுள்ளது.
2011 ஆம் ஆண்டில், நாடாளுமன்றத்தில் ஒரு கேள்விக்கு பதில் அளித்த தகவல், தொடர்பு மற்றும் பண்பாட்டு அமைச்சர் ராயிஸ் யாத்திம் பூஜாங் பள்ளத்தாக்கில் காணப்பட்டும் தொன்மையான பாரம்பரிய சின்னங்களை பாதுகாப்பதற்காக அவை காணப்படும் நிலத்தை அரசாங்கம் வாங்கும் என்று தெரிவித்தார்.
இந்த சண்டி அமைந்த இடம் அழகான இயற்கை வளம் கொண்ட இடம்
வாய்ப்பு கிடைத்தால் சென்று பாருங்கள் .இதன் மேல் கை வைக்க பணம் வாங்கியவனும் உடைத்த நிறுவனமும் இவங்கள் குடும்பங்கள்
ஜென்மத்துக்கும் உருபடாமல் போகும் .
பாரிசன் அரசாங்கம் நம் புராதன தடயங்களை அளித்து விட்டது
கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசம்.
தேர்தல் முடிந்துவிட்டதால் யார் என்ன சொன்னாலும் செவிடன் காதில் ஊதியது போல்தான், இந்த புராதனச் சின்னம் மலாய்க்காரர்கள் சம்பந்தமானதாக இருந்தால் சும்மா விடுவார்களா. மாமியார் உடைத்தால் மன்சட்டி, மருமகள் உடைத்தால் பொன்சட்டி.
முதலில் கோவில்களை அங்கும் இங்கும் உடைத்தார்கள்,பிறகு சந்திYAI உடைக்க ஆரம்பித்துவிட்டர்கள் அதற்கு பிறகு ஹிந்து தமிழர்களின் மனதை உடைத்து மதம் மாத்துவார்கள்! மலேசியன் இந்தியன் கொங்கேறேசில் MIC உள்ளவர்கள் ஒன்றும் நடக்காத மாதிரி நடிதுகொண்டோ இர்ருகிரர்கள் ! மலேசியன் இந்தியன் கொங்க்றேஸ் MIC தலைவர்கள் இன்னும் அம்னோவின் …….. கொண்டு தூங்கிகொண்டு இருகிரர்கள்!
வேண்டாம் இந்த பின்
வளயாங்கட்டிகள் இந்துக்களை மலேசியாவில் அழிபதற்கு முடிவு செய்து தானே இப்படி எல்லாம் திட்டமிட்டபடி நடக்கிறது …..
அரசாங்க கெஜட்டில் பதிவு செய்தால் ஒரு சீட் போகும். பதிவு செய்யாவிட்டால் ஆட்சியே போய்விடும். டத்தோஶ்ரீ ஜி ம.இ.காவை பாக்காத்தானில் சேர்த்துவிடுவார்…