நெல்சன் மண்டேலா காலமானார்

mandelaதென்ஆப்ரிக்காவின் இனவாத வெள்ளையர் ஆட்சியை எதிர்த்துப் போரடி தமது வாழ்க்கையின் 27 ஆண்டுகளை சிறையில் கழித்து, இறுதியில் அந்த வெள்ளையர்களைத் தோற்கடித்து தென்ஆப்ரிக்காவின் அதிபரான நெல்சன் மண்டேலா நேற்று தமது 95 ஆவது வயதில் அவரது ஜோகானெஸ்பர்க் இல்லத்தில் காலமானார்.

நீண்டகாலமாக உடல்நலமற்று பலவீனமாக இருந்த போதிலும் அவரது மரணம் தென்ஆப்ரிக்க மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

நெல்சன் மண்டேலா வெறும் அரசியல் தலைவரல்ல. உலகளவில் நீதிக்காவும் இன நல்லிணத்திற்காகவும் போராடிய ஒரு மாபெரும் வீரர் நெல்சன் மண்டேலா.

1963 ஆம் ஆண்டில் நெல்சன் மண்டேலாவுக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்த மரண தண்டனைக்குரிய ரிவோனியா விசாரணையின் போது குற்றவாளிக் கூண்டிருந்து அவர் விடுத்த அறிக்கை அவரது அரசியல் பிரகடனமாயிற்று.

“எனது வாழ்நாளில் நான் ஆப்ரிக்க மக்களின் போராட்டத்திற்காக என்னை அர்ப்பணித்துக் கொண்டேன். வெள்ளையரின் ஆதிக்கத்திற்கு எதிராக நான் போராடியுள்ளேன்; கறுப்பர்களின் ஆதிக்கத்திற்கு எதிராகவும் நான் போராடியுள்ளேன்.”

உலக மக்கள் அனைவரும் மனதில் பதிய வைத்து கடைபிடிக்க வேண்டிய அரசியல் தத்துவம் இது. மலேசியர்களுக்கு மிக அவசியமானதும் கூட.

-ராய்ட்டர்