2008-இல், கோலாலும்பூர் மாநாட்டு மையத்தில் (கேஎல்சிசி) சட்டவிரோத கூட்டம் நடத்தியதாக 43 சமூக ஆர்வலர்கள்மீது தொடுக்கப்பட்ட வழக்கு ஆவணங்கள் முறையாக இல்லை என்பதால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.
ஐந்தாண்டுகளாக இந்த வழக்கு நடக்கிறது. முதலில், பாஸ் துணைத் தலைவர் முகம்மட் சாபு, பத்து எம்பி சுவா தியான் சாங், மலேசிய சோசலிசக் கட்சித் தலைவர் முகம்மட் நாசிர் ஹஷிம், அதன் தலைமைச் செயலாளர் ஏ.அருள்செல்வன் உள்பட 45 பேர்மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர்களில் இருவர் இறந்து விட்டனர்.
எரிபொருள் விலை உயர்வை எதிர்த்து கேஎல்சிசி-இல் சட்டவிரோத கூட்டம் நடத்தினார்கள் என்றவர்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.