வெள்ள நிலை மோசமடைந்து வருகிறது; 42,626பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

1 floodதீவகற்ப மலேசியாவின் கிழக்குக் கரை மாநிலங்களில் வெள்ள நிலவரம் மோசமடைந்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு துயர்துடைப்பு மையங்களில் தஞ்சம் புகுந்துள்ளவர் எண்ணிக்கை இன்று காலை 42,626 ஆக உயர்ந்தது. நேற்றிரவு அது 37,136 ஆக இருந்தது.

மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலம் பகாங். அங்கு துயர்துடைப்பு மையங்களில் இருப்போர் எண்ணிக்கை 34,235.

அங்கு பல முக்கிய சாலைகளில் வெள்ளநீர் தேங்கி நிற்பதால் போக்குவரத்துக்கு மூடப்பட்டிருக்கின்றன.