கார் இலக்கத் தகடு (நம்பர் பிளேட்) விவகாரத்தில் முன்னாள் பேராக் மந்திரி புசார் நிஜார் ஜமாலுடின் பெயரைக் களங்கப்படுத்தியதற்காக உத்துசான் மலேசியா நாளேடு ரிம250,000 இழப்பீடு கொடுக்கத்தான் வேண்டும்.
இன்று முறையீட்டு நீதிமன்றம், உத்துசான் செய்த மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து ஏற்கனவே உயர் நீதிமன்றம் அளித்திருந்த தீர்ப்பை உறுதிப்படுத்தியது.
நீதிபதி ஸ்ஹாரா இப்ராகிம் தலைமையில், மூவரடங்கிய நீதிபதிகள் குழு, உத்துசான் நிஜாருக்கு வழக்குச் செலவாக ரிம20,000 கொடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
எடுக்க2 வற்றாத “அமுத சுரபி” அதன் பின்னால் இருக்கும் போது அதற்கு வீண் கவலை ஏன்..?!
இது என்ன செய்தி வழங்கும் பத்திரிக்கையா அல்ல மான நஷ்டஈடு வழங்கும் பத்திரிக்கையா? அல்ல இது ஒரு அவமானச் சின்ன பத்திரிக்கையா? எங்கே அம்நோபுற்றுக்கள், இந்த பத்திரிக்கையை இந்நேரம் கொளுத்திருக்க வேண்டாமா?