ஷரிசாட்: அன்வார்-நஜிப் கலந்துரையாடல் வீணான செயல்

1 assemblyஅம்னோ மகளிர் தலைவி ஷரிசாட் அப்துல் ஜலில், கட்சித் தலைவர் நஜிப் அப்துல் ரசாக்கும் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிமும் கலந்துரையாடுவதால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை என்கிறார்.

“அது நேரத்தை வீணாக்கும் செயல். பிரதமர் வேறு நல்ல காரியங்களைச் செய்யலாம்”, என்றவர் கூறினார்.

நேற்று நஜிப், அம்னோ பொதுப்பேரவையில் தலைமை உரையாற்றியபோது மற்ற அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாட தயார் எனக் குறிப்பிட்டிருந்ததன் தொடர்பில் ஷரிசாட் இவ்வாறு கருத்துரைத்தார்.