நம் நாட்டு மாணவன் சிங்கப்பூர் மாணவனைவிட படிப்பில் நான்காண்டு பின்தங்கி உள்ளான்

1 kit siangசிங்கப்பூர், சீனா, ஹாங்காங் ஆகிய நாடுகளின் கல்வித் தரத்துடன் ஒப்பிட்டால் மலேசியாவில்  ஒரு சராசரி 15-வயது மாணவன்,  படிப்பில் நான்காண்டுகள் பின்தங்கி இருப்பதாக டிஏபி பெருந் தலைவர் லிம் கிட் சியாங் கூறினார்.

அனைத்துல மாணவர் மதிப்பீட்டுச் சோதனை முடிவுகளை(PISA) அடிப்படையாக வைத்து அவர் இவ்வாறு கூறினார். 74-நாடுகளில் நடத்தப்பட்ட அச்சோதனையில் மலேசியா 52-வது இடத்தைப் பெற்றிருந்தது.

அது 2009-ஆம் ஆண்டுக்கான மதிப்பீடுதான் என்று கூறிய லிம், அதன் பின்னர் மலேசியா அதன் தரவரிசையை உயர்த்திகொள்ள முயலவில்லை என்பதால் இப்போது இடைவெளி மேலும் விரிவடைந்திருக்கலாம் என்றார்.

PISA முடிவு குறித்து மவுனம் சாதிக்கும் கல்வி அமைச்சர் முகைதின் யாசின் மலேசியா பின்தங்கி இருப்பதற்கான காரணத்தை விளக்க வேண்டும் எனவும் லிம் வலியுறுத்தினார்.