முக்ரிஸ்: ‘1மலாயு’ எனல் வேண்டும் என்றுரைத்தவரைத் தண்டிக்க வேண்டியதில்லை

1 muk“1மலேசியா”-வுக்குப் பதில் இனி “1மலாயு” என்றுதான் சொல்ல வேண்டும் என முன்மொழிந்த புக்கிட் மெர்தாஜாம் தொகுதித் தலைவர் மூசா ஷேக் பாட்சிரைத் தண்டிக்க வேண்டியதில்லை என கெடா மந்திரி புசார் முக்ரிஸ் மகாதிர் கூறினார்.

நேற்று அம்னோ பொதுப்பேரவையில் அவ்வாறு கூறிய மூசா அப்படிச் சொன்னதை மீட்டுக்கொள்ள வேண்டும், தவறினால்  அவரைக் கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என கெராக்கான் கோரிக்கை விடுத்திருப்பதற்கு முக்ரிஸ் இவ்வாறு பதிலிறுத்தார்.

“மலாய்க்கார்களின் ஒற்றுமை பற்றிப் பேசுகிறோம். அதில் என்ன இனவாதம் இருக்கிறது?

“மலாய்க்கார் ஒற்றுமை என்றால் மற்றவர்களை ஒதுக்கி  வைத்தல் என்று கெராக்கான் அர்த்தப்படுத்திகொண்டிருக்கிறது”, என்றாரவர்.