அம்னோ ‘1மலாயு’-வை ஆதரிக்காது- அம்னோ தலைவர்கள்

1 assemஅம்னோ பொதுப்பேரவையில் ‘1மலாயு’ பற்றிப் பேசப்பட்டாலும் அம்னோ  ‘1மலேசியா’ என்பதைக் கைவிடாது என அக்கட்சித் தலைவர்கள்  வலியுறுத்தினர்.

மலாய் ஆதரவை மட்டுமே கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதை அவர்கள் ஏற்கவில்லை. கட்சிக்கு  “மற்றவர் ஆதரவும் தேவை”.

“இது அம்னோ பொதுப்பேரவை. பேராளர்கள் சொந்த கருத்துக்களை எல்லாம் எடுத்துரைப்பார்கள்”,  என்று மகளிர் தலைவி ஷரிசாட் அப்துல் ஜலில் கூறினார்.

ஆனால், (அம்னோ தலைவர் நஜிப் அப்துல் ரசாக்கின் தலைமையில்) அம்னோவுக்கென “ஒரு கருத்து உண்டு.  அதுதான் 1மலேசியா”, என்றவர்  குறிப்பிட்டார்.

அவர் சொன்னதை கட்சி உதவித் தலைவர் ஷாபி அப்டாலும் ஒப்புக்கொண்டார்.

“எல்லோருடைய ஆதரவும்தான் தேவை……அம்னோவின்கீழ் மலாய்க்காரர்களை ஒன்றுபடுத்தும் வேளையில் சீனர்களையும் இந்தியர்களையும் மறக்க மாட்டோம்”, என்றாரவர்.

சாபாவைச் சேர்ந்தவரும் உச்சமன்ற உறுப்பினருமான பங் மொக்தார் ரடினும் அதே கருத்தைத்தான்  வெளிப்படுத்தினார்.

“1மலேசியா இன்னும் தேவையான ஒன்றுதான்.  அது சீனர் வாக்குகளைப் பெற்றுத்தரத் தவறி இருக்கலாம். ஆனால், அது ஒரு தேசிய அடையாளம்.

“அம்னோ, என்றும் மற்ற இனங்களைக் கைவிடாது”, என பங் மொக்தார் குறிப்பிட்டார்.