1மலாயு’ எனல் வேண்டும் என்றுரைத்த அம்னோ பேராளர் அதற்காக மன்னிப்பு கேட்க மாட்டார்

1 assemஅம்னோ பேரவையில் பினாங்கு பேராளர் மூசா ஷேக் பாட்சிர், இனி  1மலேசியா வேண்டாம்  1மலாயு  என்றுதான் முழங்க வேண்டும்  என்று  கூறியதற்காக மன்னிப்பு கேட்க  வேண்டும்  என கெராக்கான் விடுத்துள்ள கோரிக்கையை ஏற்க மாட்டார்.

“கெராக்கான் ‘ஹீரோ’ ஆக முயல்கிறது……நான் மன்னிப்பு கேட்க மாட்டேன். நான் தவறு ஏதும் செய்யவில்லை. இது மலாய்க்காரர் பேரவை.  எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்?

“மற்ற இனத்தார் அவர்களின் பேரவையில் அவர்களின் இனத்தைப் பற்றிப் பேசுகிறார்கள். ஆனால், மலாய்க்காரர்கள் பேசக்கூடாது…..  நான் மன்னிப்பு கேட்கப்போவதில்லை.  என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளட்டும்”, என்றாரவர்.