அரசாங்கம் அரசியல், பொருளாதார உருமாற்றத் திட்டங்களை மேற்கொண்டு வந்தாலும் ஊழல் ஒழியவில்லை அது பெருகிக்கொண்டுதான் இருக்கிறது என்கிறார் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம்.
இதற்கு 2013 தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கையில் நிறைய எடுத்துக்காட்டுகளைக் காணலாம். இன்று உலக ஊழல்-எதிர்ப்பு நாளையொட்டி வெளியிட்ட செய்தியில் பிகேஆர் நடப்பில் தலைவருமான அன்வார் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
“இதிலிருந்து ஊழலை எதிர்த்துப் போராடும் அரசியல் உறுதிப்பாடு அரசுக்கு இல்லை என்பது தெளிவாக தெரிகிறது”, என்றாரவர்.
உழல் பெருச்சாளிகளின் கூடாரம் அம்னோ என்பது உங்களுக்கு தெரியாதா என்ன.அப்புறம் ஏன் கூவிக்கிட்டே இருக்கீங்க?என்னத்த கத்தினாலும் திருட்டு நாதாரிகள் திருந்த போவதில்லை.முட்டாள் மக்கள் அந்த உழல் தேமுவுக்கு ஓட்டுப்போட தவறுவதுமில்லை.
அரசியல் என்றாலே ஊழல் தான்! அதுவும் அரசாங்கம் என்றால் சொல்லவா வேண்டும்! உங்களுக்குத் தெரியாததா! நான் என்னத்தைப் புதிதாகச் சொல்லப் போகிறேன்!
தவறு செய்கிறவன் தனது தவறினை பணத்தால் மறைக்க கண்காணிக்கும் அதிகாரியை நாடுகிறான். பேராசையால் கண்காணிக்கும் அதிகாரியும் அந்த தவறினை தனது அதிகாரத்தால் மறைத்துவிடுகிறான். ஆக ஊழலுக்கு மூல காரணம் பேராசைதான். ஒருவனுக்கு தேவைப்படும் சொத்திற்கு அளவில்லாமல் போய்விட்டது. ஒரு நாளில் ஒருவன் உண்ணும் உணவிற்கு அளவென்ன? ஒரு நாளில் எத்தனை கட்டிலில் உறங்க முடியும். இப்படியிருக்க ஒருவனுக்கு என் எண்ணற்ற வீடுகளும், தேவைக்கு மேலான சொத்தும்? ஆகவே அளவான செல்வத்தோடு வளமாக மனிதன் வாழ கற்றுக்கொண்டால் மட்டுமே ஊழலை கட்டுப்படுத்தவோ முற்றாக அழிக்கவோ முடியும். சிலர் தமது பிள்ளைகள் நல்ல முறையில் வாழ முடியும் என்றும் அவர்களும் நம்மைப்போல் உழைத்து பொருளீட்டி வாழ முடியும் என்று நபாமல் அவர்களுடைய நல வாழ்வுக்கென்று பல தலைமுறைக்கு சொத்து சேர்க்க முயல்வதும் ஊழலுக்கு வேர் ஆகிறது. நம்மை போல நமது சந்ததியினரும் நல்ல முறையில் வாழ முடியும் என்று நம்புவோம். இவ்வாறு நாம் எண்ணினால், இறைவன் நமக்கு அளித்திருக்கும் வளங்களை இப்பொழுதே முழுமையாக தோண்டி அழித்துவிடாமல் நமது சந்ததியினரும் பயன்படுத்த வேடியத்தை அவர்களே தோண்டி பயன்பெற விட்டு செல்வோம். நாம் எப்படி மற்றவர் சாப்பிட்டு விட்டு சென்ற மீதமிருக்கும் உணவை நாம் உன்ன மாட்டோமோ அவ்வாறே நாம் பயன்படுத்திவிட்டு மீதமிருக்கும் செல்வமுமிருக்கும். நம்மீதும். நமது சந்ததியினர்மீதும் இறைவன் மீதும் நம்பிக்கை கொண்டு வாழ இறைவன் நம்மை அசீர்வத்தித்து வழி நடத்துவாராக.
அன்வார் சொல்வது முற்றிலும் உண்மை