கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள 10 நெடுஞ்சாலைகளின் சாலைக் கட்டண விகிதம் குறித்து அமைச்சரவை விவாதிக்கவுமில்லை, முடிவு செய்யவுமில்லை.
இதைத் தெரிவித்த பொதுப்பணி அமைச்சின் பேச்சாளர் ஒருவர், புதிய சாலைக்கட்டணம் என்று இணையத்தில் உலாவரும் தகவல்கள் வெறும் வதந்திகளே என்றார்.
இதன் தொடர்பில் பொதுப்பணி அமைச்சர் பாடில்லா யூசுப் அடுத்த வாரம் அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிடுவார் என்றாரவர்.
சாலைக்கட்டணம் 40 சென்னிலிருந்து ரிம1.00 வரை உயரப்போவதாக அந்த இணையச் செய்திகள் கூறின.
வதந்தி என்று அரசாங்கம் சொன்னாலே கட்டணம் உயரப்போவது உறுதி என்று அர்த்தம்
இப்போதைக்கு இது வெறும் வதந்தி தான்! அடுத்த ஆண்டு ஜனவரி வாக்கில் தான் இது நடப்புக்கு வரும். அது வரையில் வதந்திகளை நம்ப வேண்டாம்!
அடுத்த தேர்தலில் bn தூக்கி சாக்கடையில் போடா வேண்டும் .
மலேசியா சுடாஹ் மகு கில ல!
இதெல்லாம் வதந்திகள் அல்ல. போன தேர்தலில் கொடுத்த பணத்தை எல்லாம் எப்படி வசூலிக்கிறது? அத்துடன் அம்னோக்கு வாரி கொடுக்க வேண்டுமே.மறு தேர்தல் இன்னும் 4 ஆண்டுகள் காக்க வேண்டுமே? இப்போது பிடுங்கினால் தானே
வதந்திதான் அரசாங்கத்தின் மக்களுக்கு கொடுக்கும் தந்தி .பிறகு மந்திரி முந்தியடித்து ஏற்றுவார்……………
போற போக்கை பார்தால் இரு சக்கர ஊர்தீகும் பணம் வசூளிகபடும் போலே !!!! வாழ்க பி அண்ணன்
வதந்தியோ உண்மையோ ஆனால் என்னை விலை மீண்டும் உயர போவது உறுதி ,,எல்லாரும் மேதி வண்டியில் வேலைக்கு போகவேண்டியதுதான் நிலைமை !