பூஜாங் பள்ளத்தாக்குச் சின்னங்களை இடம் மாற்றினால் அவற்றின் முக்கியத்துவம் குறைந்துபோகும்

bujangபூஜாங் பள்ளத்தாக்கில் 200  சதுர கிலோமீட்டர் பரப்பளவில் சிதறிக் கிடக்கும்  பழங்கால  நாகரிகத்தின் கட்டுமானங்களை  இடமாற்றம் செய்வதில்  பினாங்கு முதலமைச்சர் லிம்  குவான் எங்குக்கு உடன்பாடில்லை.

பழங்கா ல நாகரிகச் சின்னங்களைக் கண்டெடுக்கும் அகழ்வாராய்ச்சியாளர்கள்,  மண் பாண்டங்கள், களிமண் சிலைகள் போன்றவற்றைத்தான்  அப்புறப்படுத்துவார்கள். மற்றவற்றை  அப்படியே  இருந்த இடத்திலேயே விட்டு வைத்திருப்பார்கள்.  இதுதான் வழக்கம் என்றாரவர்.

கெடா மந்திரி புசார், முக்ரிஸ் மகாதிர்  பழங்காலச் சின்னங்களை  ஒரே இடத்தில் மாற்றி வைக்கலாம் என்று கூறி இருப்பதன் தொடர்பில் டிஏபி தலைமைச் செயலாளருமான லிம் இவ்வாறு கருத்துரைத்தார். இவ்வட்டாரத்தின் மிகப் பழைய நாகரிகம் விட்டுச் சென்ற அச்சின்னங்கள் “பரந்து விரிந்து” கிடப்பதால் அவற்றை ஒரே இடத்தில் வைப்பதுதான் பொருத்தமாக இருக்கும் என முக்ரிஸ் கூறினார்.

ஆனால், 2,000 ஆண்டு பழைமைவாய்ந்த அச்சின்னங்களை இருக்கும் இடத்தைவிட்டு அப்புறப்படுத்துவது அவற்றின் வரலாற்றுச் சிறப்பைக் குறைந்து விடும் என லிம் ஓர் அறிக்கையில் குறிப்பிட்டார்.

இவ்விவகாரத்தில் வல்லுனர்களின் கருத்தை நாடுவதே முறையாகும் என்றாரவர்.