வார இறுதியில் அம்னோ பொதுப்பேரவையில் பல பேராளர்கள், இனம், சமயம் போன்ற விவகாரங்களில் ஆத்திரப்பட வைக்கும் வகையில் கருத்துக்களை அவிழ்த்து விட்டார்கள்.
இன, சமய விவகாரங்களில் தீவிரவாத கருத்துக்கள் தெரிவிக்கப்படுவது அம்னோவில் மட்டுமல்ல. பக்காத்தான் ரக்யாட்டிலும் உண்டு.
முன்னாள் பிரதமர் மகாதிர் முகம்மட், எல்லா மலேசியர்களுமே தீவிரவாதிகள்தாம் என்றுகூட சொல்லி இருக்கிறார்.
இக்கருத்துடன் உடன்படும் முன்னாள் சட்ட விவகார அமைச்சர் ஜைட் இப்ராகிம், தீவிரவாதம் எங்கும் உண்டு என்றாலும் அதில் முதலிடம் அம்னோவுக்குத்தான் என்று வலியுறுத்துகிறார்.
“தீவிரவாதம் விரைவாக தீர்வுகாணும் ஒரு வழியாக விளங்குகிறது. தங்கள் தொல்லைகளுக்கு காரணம் மற்றவர்கள்தான் எனப் பழிபோடுவது எளிதாக இருக்கிறது.
“தீவிரவாதம் பல வடிவங்கள் எடுக்கும்……சமயத் தீவிரவாதத்தில் தலைமை இடம் அம்னோவுக்குத்தான். பக்காத்தானில் அது இல்லாமலில்லை. ஆனால், குறைவு”, என்றாரவர்.
இப்போதெல்லாம் மிதவாதத்துக்கு அல்லது சகிப்புத்தன்மைக்கு மதிப்பில்லை என்று கூறிய அந்த முன்னாள் அமைச்சர் இனப் பாதுகாவலராகக் காண்பித்துக்கொள்வதுதான் வரவேற்பைப் பெறுகிறது என்றார்.
மக்கள் இதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட ஜைட், வெறுப்பு அரசியலில் உழலும் தலைவர்களை மக்கள் விரட்டி அடிக்க வேண்டும் என்றார்.
மக்கள் நிராகரிக்கத் தோடங்கினால் தலைவர்கள் மாறுவார்கள்.
ஜைட் இப்ராகிம் ,நீர் தண்ணி கிண்ணி போட்டுகிட்டு உளறவில்லைலே ? பார்த்து பேசுப்ப அப்புறம் அம்னோ மீண்டும் உனக்கு ஆப்பு அடிசிற போறானுங்க
ஜைட் இப்ராகிம் ,நீர் தண்ணி போட்டா ஒரு பக்கமா ஸ்டெடியா இருக்கோணும் ,நீர் தண்ணிய போட்டுக்கிட்டு இங்கேயும் ஆண்கேயும் பேசிக்கொண்டு இருந்தால் எப்படி மாமு ?