நேற்று செர்டாங் மருத்துவமனையில் உள்கூரை இடிந்து விழுந்ததில் மருத்துவமனை பணியாளர் ஒருவரின் துணைவியாரும் அவரின் நான்கு பிள்ளைகளும் மயிரிழையில் காயமின்றித் தப்பினர்.
2013-இல், அம்மருத்துவமனையில் கூரை இடிந்து விழுவது இது நான்காவது தடவையாகும்.
நேற்று பிற்பகல் மணிக்குப் பணியாளர் குடியிருப்புப் பகுதியில் ஒரு கழிப்பறையில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக உத்துசான் மலேசியா அறிவித்தது. மருத்துவமனையில் இன்னொரு பகுதியில் கூரை இடிந்து விழுந்து ஒரு வாரம்தான் ஆகிறது.
“குடியிருப்புப் பகுதியில் உள்கூரை மட்டுமல்ல. தண்ணீர் குழாய்கள், தளவரிசை போன்றவையும் சேதமடைந்துள்ளன.
“இதனால், குடியிருப்பைவிட்டு வெளியேறி, வெளியில் வீடுகளை வாடகைக்கு அமர்த்திக்கொள்ள பணியாளர்கள் தீர்மானித்திருக்கிறார்கள்”, என்றந்த நாளேடு கூறிற்று.
அம்னோ புத்ராக்களால் கட்டப்பட்ட மருத்துவமனை, குடியிருப்புக்கள் எதுவாக இருந்தாலும் அவைகள் கூரைகளைப் பிய்த்துகொண்டு தான் விழும். ஏதோ முழுசா ஒன்றும் ஆகவில்லையே என்று சந்தோஷப்படுங்கள்!
அந்த மருத்துவமனை இயக்குனர் என்ன மயிரா புடுங்கிக் கொண்டிருகின்றார் என்று கேட்க வேண்டும் போல இருக்கு. ஏன்டா, மக்கள் வரிப்பணத்தை இப்படி அனாவசியமாக வீனடிகிண்றீர்கள். நீங்கள் எல்லாம் என்ன கண்ணிருந்தும் கபோதிகளா?
இதற்க்கு பொதுபணி அமைச்சு(j .k .r ). என்ன சொல்ல போகிறது ?
ஒரு குத்தகை 100M ஆகா பாராளுமன்றத்தில் ஒப்புதல் வழங்கிய பிறகு MOF,PM அலுவலகமுதல் பொதுப்பணி அலுவலகம் வரை உள்ள குள்ளநரிகள் சிறிது சிறிதாக பங்கு போட்டு கடைசியில் குத்தகையலரிடன் வந்து சேரும்போது வெறும் 50M க்கும் குறைவாகவே ஒதுக்கிடு கிடைக்கும்! பிறகு ஏன் கட்டிடம்,
மேம்பாலம்,விளையாட்டு அரங்கம் என்று இன்னும் எத்தனையோ பொது இடங்கள் இடிந்து விழாது???