சரவாக் அரசை எதிர்த்து ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்

1-nicholasகூச்சிங்கில், சரவாக்கின் பூர்விகக் குடிகளைச் சேர்ந்த நில உரிமையாளர்கள் ஒன்றுதிரண்டு  மாநில அரசுக்கு எதிராக பேரணி ஒன்றை நடத்தினர்.

அதில் அவர்கள், சரவாக் முதலமைச்சர் அப்துல்  தாயிப் மஹ்மூட்  தங்களிடமிருந்து பறித்துக்கொண்ட நிலங்களைத் திருப்பித் தரவேண்டும் என்றும் பூர்விகக் குடியினரின் நில உரிமைகளை மதிக்க வேண்டும் என்றும் பூரிவிகக் குடியினரின் பாரம்பரிய உரிமைகள் தொடர்பில் நீதிமன்றங்களின் தீர்ப்பை மதிக்க வேண்டும் என்றும்  கோரிக்கை விடுத்தனர்.

மாநில அரசு பெரிய அணைக்கட்டுகள் கட்டும் வேலைகளையும் மாநில வளங்களைச் சுரண்டுவதையும்  நிறுத்த வேண்டும் என்றவர்கள் விரும்புகிறார்கள்.

இதே கோரிக்கைகள் சிபு, மீரி, பிந்துலு ஆகிய இடங்களில் மனித உரிமை நாளையொட்டி நடைபெற்ற பேரணிகளிலும்   வலியுறுத்தப்பட்டன.

“கூச்சிங்கில் பல சமூகத்தினரும் ஒன்றுசேர்ந்து நடத்திய பேரணி பூரிவிகக் குடியினரின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்ற செய்தியை முதலமைச்சருக்குத் தெளிவாக உணர்த்தி இருக்கும்”, என்று பாடாங் மெர்டேகா பேரணி தலைவர்களில் ஒருவரான நிக்கோலஸ் பவின் கூறினார்.