பாஸ் கட்சித் தலைவர்கள் ஷியா கொள்கையைப் பின்பற்றுபவர்கள் என்று கூறும் உள்துறை அமைச்சு அதற்கான ஆதாரங்களைக் காண்பிக்க வேண்டும் என அக்கட்சியின் மத்திய செயல்குழு உறுப்பினர் நிக் முகம்மட் அப்து நிக் அப்துல் அசீஸ் சவால் விடுத்துள்ளார்.
பாஸ் கட்சி அறிந்தவரை, அக்கட்சித் தலைவர்களில் எவருமே ஷியா பிரிவைச் சேர்ந்தவர் அல்லர் என பாசிர் மாஸ் எம்பியுமான நிக் அப்து தெரிவித்தார்.
“இது வெளியாரும் அம்னோவும் கட்டிவிடும் கதை. உள்துறை அமைச்சிடம் ஆதாரம் இருந்தால் காண்பிக்கட்டும். இந்த விவகாரத்தை வைத்து அரசியல் ஆட வேண்டாம்”, என்றவர் குறிப்பிட்டதாக சினார் ஹரியான் கூறியது.
ஏண்டாப்பா உங்கள் மதத்தில் இவ்வளவு பிரச்சனையா? நிச்சயமாக இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு கிடைக்கப் போவதில்லை காரணம் சியா முஸ்லிம்களும் உலகில் அதி வேகமாக பெருகிக் கொண்டு வருகின்றனர். இது எங்கே போய் முடியுமோ? அது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.