ஜஹாரா: இனவாதப் பாட்டி என்று சொன்னதற்கு சிஎம் மன்னிப்பு கேட்க வேண்டும்

jaharaபினாங்கு சட்டமன்ற எதிரணித் தலைவர் ஜஹாரா ஹமிட், தம்மை “இனவாதப் பாட்டி” என்று குறிப்பிட்ட முதலமைச்சர் லிம் குவான் எங்குக்கு எதிராக ஆத்திரமாக இருக்கிறார்.

சட்டவிரோத வியாபாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்போது இனம்பார்த்து நடவடிக்கை எடுக்கப்படுவது பற்றி ஜஹாரி கேள்வி எழுப்பியதை அடுத்து முதலமைச்சர் அவ்வாறு குறிப்பிட்டார்.

ஜஹாராவை ஒரு சராசரி பாட்டி என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், “அவர் நியாமமற்ற இனவாதப் பாட்டி ஆக மாறிவிட்டார்” என லிம் கூறினார்.

அப்படிக் குறிப்பிட்டதன்வழி லிம், முதமலைச்சர் பதவியின் “கெளரவத்தையே குறைத்துவிட்டார்” என்றும் அதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ஜஹாரா கூறினார்.

“அது என்னையும் என்னைப்போன்ற பாட்டிகளையும் அவமதிக்கிறது……சிறுமைப்படுத்துகிறது”, என்று மாநில சட்டமன்றத்தில் செய்தியாளர் கூட்டமொன்றில் ஜஹாரா தெரிவித்தார்.