இண்ட்ராப் நடப்பில் தலைவர் பி.உதயகுமார், அரச நிந்தனை குற்றச்சாட்டின்பேரில் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து செய்துள்ள மேல்முறையீடு ஒருவழியாக ஜனவரி 15-இல், கோலாலும்பூர் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
நீதிபதி அஸ்மான் ஹுசேன் முன்னிலையில் அது விசாரிக்கப்படும்.
உதயகுமார் 2007-இல் தேசநிந்தனை கருத்துக்களைத் தெரிவித்தார் என்று குற்றம்சாட்டப்பட்டு இவ்வாண்டு ஜூன் 5-இல், செஷன்ஸ் நீதிமன்றம் அவருக்கு ஈராண்டு ஆறு மாதச் சிறைத்தண்டனை விதித்தது.
2007-இல், அப்போதைய பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுனுக்கு எழுதிய கடிதத்தில் அவர் அந்தத் தேச நிந்தனைக் கருத்துக்களைத் தெரிவித்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
அடே எங்கப்பா அண்ணனும் தம்பியும் நடிப்பிலே போட்டி போட்டுகிட்டு பின்னுரானுங்கப்பா ,தாங்க முடியவில்ல !