ஒப்ஸ் சாண்டாஸில் தடுத்து வைக்கப்பட்டவர்களில் 55 விழுக்காட்டினர் மலாய்க்காரர்கள்

1 zahidநாட்டின் கடும் குற்றவாளிகளைக் களையெடுக்க மேற்கொள்ளப்பட்ட ஒப்ஸ் சாண்டாஸ் நடவடிக்கையில் தடுத்து வைக்கப்பட்டவர்களில்  55 விழுக்காட்டினர்  மலாய்க்காரர்கள் என உள்துறை அமைச்சர்  அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடி கூறினார்.

30 விழுக்காட்டினர் இந்தியர்கள்.  இவர்கள் போக மற்றவர்கள் சீனர்களும் இதர இனத்தவருமாவர்.

ஆகஸ்ட் நடுப்பகுதியில் தொடங்கப்பட்ட அந்நடவடிக்கையில் 1.1மில்லியன் சந்தேகப் பேர்வழிகள் விசாரிக்கப்பட்டு , 39,000 பேர் தடுத்து வைக்கப்பட்டனர். அவர்களில் 10,000 பேர் ஏற்கனவே பல குற்றங்களைப் புரிந்தவர்கள்.

“குற்றம் இன, நிற வேறுபாடு பார்ப்பதில்லை. நாங்களும் அப்படித்தான்”, என அஹ்மட் ஜஹிட் கூறினார்.