பிஎன் 2014-ஐ‘விலை உயர்வு ஆண்டாக்க’ திட்டம் போட்டுவைத்துள்ளது. இவ்வாறு கூறிய பிகேஆர் வியூக இயக்குனர் ரபிசி ரம்லி, அடுத்த ஆண்டு ஏப்ரல் வாக்கில் போக்குவரத்துக் கட்டணங்கள் உயரும் சாத்தியம் இருப்பதே இதற்குத் தக்க சான்று என்றார்.
இது, 2015, ஏப்ரல் முதல் தேதி பொருள், சேவை வரி(ஜிஎஸ்டி) அமலுக்கு வருவதற்கு முன்னதாக, 2014-இல் ஒவ்வொன்றாக விலையை உயர்த்த பிஎன் திட்டம் போட்டுள்ளது என நெடுகிலும் தாம் சொல்லி வந்தது உண்மை என்பதை மெய்ப்பிக்கிறது என்றாரவர்.
2009-இலேயே விலை உயர்வுக்கு திட்டம் போடப்பட்டது என்றும் ரபிசி குறிப்பிட்டார்.
“ஆனால், அது உடனடியாக நடைமுறைக்கு வரவில்லை. மக்கள் ஆத்திரம் அடைவார்கள். 13வது பொதுத் தேர்தலில் ஆதரவு குறையும் என பிஎன் பயந்தது.
“பொதுத் தேர்தலில் வென்ற பின்னர் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு பிஎன் திட்டமிட்டபடி விலை உயர்வை அமல்படுத்தி வருகிறது”, என்று ரபிசி ஓர் அறிக்கையில் குறிப்பிட்டார்.