2014-இல், மலேசியர்களுக்கு சிரமம்தான்

1 bank2014, மலேசியர்களுக்கு ஒரு சிரமமான ஆண்டாகத்தான் இருக்கும்.  இது, ஜோதிடமல்ல. உலகப் பொருளகம்  கூறும்  ஆருடம்.

அரசாங்கம் தொடர்ந்து உதவித் தொகையைக் குறைத்துக்கொண்டும் மற்ற கொள்கைகளை அமல்படுத்திக்கொண்டும் வந்தால் குடும்ப வருமானம் பெரிதும் பாதிக்கப்படும் என அப்பொருளகத்தின் பொருளாதாரக் கண்காணிப்பு அறிக்கை கூறுகிறது.

பந்துவான் ரக்யாட் 1மலேசியா (பிரிம்) போன்ற பண உதவிகளைச் செய்து வந்தாலும் மக்கள் வயிற்றை இறுகக் கட்டிக்கொண்டுதான் வாழ வேண்டியிருக்கும். இதனால் தனியார் பொருள் பயனீடு பெருமளவு குறையும் என்றது கூறிற்று.

பிரிமுக்காக அரசாங்கம் ரிம7.1 பில்லியனைச் செலவிடுகிறது. அதற்கான பணத்துக்காக, இப்போது 23 விழுக்காடாக உள்ள எரிபொருள் உதவித்தொகைக் குறைப்பு 2014-இல் 28.6 விழுக்காடாக விரிவடையலாம் எனவும் அது தெரிவித்தது.