செர்டாங் மருத்துவமனை தொடர்பில் குத்தகையாளர் விசாரிக்கப்படுவார்

1 dr subraசெர்டாங் மருத்துவமனையில் உள்கூரை இடிந்து விழுந்த சம்பவங்களுக்கு குத்தகையாளர் பொறுப்பாக்கப்பட்டு சேதங்களுக்கு இழப்பீடு கோரி வழக்கு தொடுப்பது பற்றி அரசாங்கம் ஆராயும்.

மருத்துவமனையில் சீரமைப்பு வேலைகளுக்கும் கட்டிடப் பராமரிப்புக்கும் ரிம30 மில்லியன் ஒதுக்கப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம் கூறினார்.  2011 தொடங்கி குறைந்தது ஏழு தடவை அம்மருத்துவமனையின் பல பகுதிகளில் உள்கூரை இடிந்து விழுந்திருக்கிறது. மருத்துவமனை 2005-இல் கட்டப்பட்டது.

“அமைச்சு எந்த விவகாரத்தையும் மூடி மறைக்கவில்லை. குத்தகையாளர்தான் கட்டிடத்துக்குப் பொறுப்பு. நாங்கள் தேவையான நடவடிக்கைகளை எடுப்போம். பொதுப்பணித் துறை அறிக்கைக்காகக் காத்திருக்கிறோம். அது கிடைத்த பின்னர் ஏற்பட்ட சம்பவத்துக்கு குத்தகையாளர்தான் பொறுப்பா, இல்லையா என்று முடிவு செய்யப்படும்”, என அமைச்சர் கூறினார்.