ஷியாக்களை எதிர்க்க ‘ஷியாரியா’ போலீஸ் அமைக்கலாமா என ஜாஹிட் ஆலோசனை

zahidஷியா கொள்கைகள் உள்பட மாறுபட்ட போதனைகளின் பரவலைத் தடுக்க தனி போலீஸ் பணிப்படை ஒன்றை அமைக்கலாமா என்பதை உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி ஆராய்வார்.

அது பற்றி பிரதமர்துறை அமைச்சர் ஜமில் கீர் பஹாரோமுடன் கலந்து பேசப்போவதாக அஹ்மட் ஜாஹிட் நேற்றிரவு பெர்னாமாவிடம் தெரிவித்தார்.

“தவறான போதனைகளைப் பரப்புவோரை எதிர்க்க ஷியாரியா போலீஸ் படை அமைக்கலாம் என்று என்ஜிஓ ஒன்று பரிந்துரைத்தது…..இதை விரிவாக ஆராய்வோம்”, என்றாரவர்.