ஷியா விவகாரத்தில் பாஸ் அதன் துணைத்தலைவர் மாட் சாபுவுக்கு முழு ஆதரவு

1 pasமுகம்மட் சாபு ஷியா கொள்கையைப் பின்பற்றுபவர் என்பதற்கு உள்துறை அமைச்சு பத்து ஆதாரங்களைப் பட்டியல் போட்டுக் காட்டினாலும் பாஸ் அதன் துணைத் தலைவருக்கு முழு ஆதரவைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறது.

அது முன்வைத்த ஆதாரங்கள்  “பலவீனமானவை” என பாஸ் தலைமைச் செயலாளர் முஸ்தபா அலி(இடம்) கூறினார்.

“ஏதோ வலுவான ஆதாரங்களைக் காண்பிக்கப் போகிறார்கள் என்று பார்த்தேன்……அவை அற்பமானவை……

“எடுத்துக்காட்டுக்கு ஈரானுக்குப் போவது. பலரும் போகிறார்கள். நானே பல தடவை சென்றிருக்கிறேன். பலர் சீனாவுக்குப் போகிறார்கள். அவர்களை எல்லாம் கம்முனிஸ்டுகள் என்று நினைப்பதா?

“அம்னோ சீனக் கம்முனிஸ்டுக் கட்சியுடன் தொடர்பு வைத்துள்ளதே? அம்னோ கம்முனிஸ்டா?”.

பாஸ் கட்சியின் இணைய செய்தித்தளமான ஹராகாடெய்லியில் முஸ்தபா இவ்வாறு கூறினார்.