பினாங்கின் புதிய வீட்டுவசதி விதிமுறைகளைக் குறைகூறுவது ‘இதயமற்ற செயல்’

DAP-Guan Engபினாங்கில்  கட்டுப்படியான-விலை வீடுகளை வாங்கி குறிப்பிட்ட காலத்துக்குள் அவற்றைத் திரும்ப விற்பதைத் தடுக்கும் புதிய விதிமுறைகளைக் குறைகூறுவோரை முதலமைச்சர் லிம் குவான் எங், சாடினார்.

அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் நாள் நடைமுறைக்கு வரும் அப்புதிய விதிமுறைகள், முதல்முறையாக வீடு வாங்குவோருக்கு உதவுவதையும் சொத்து விலை கட்டுமீறி உயர்வதைத் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டவை என அவர் ஓர் அறிக்கையில் வலியுறுத்தினார்.

“புதிய விதிமுறைகளை இதயமற்ற முறையில்  குறைகூறுவோர் ஏற்கனவே சொந்தமாக வீடுகளை வைத்திருப்பதால் அவ்வாறு குறைகூற முடிகிறது. அதேவேளை அவர்கள் முதல்-தடவை வீடு வாங்குவோரை மறந்து விடுகிறார்கள்”, என்றாரவர்.