சொத்து மதிப்பீட்டு வரி உயர்வுக்கு ஆட்சேபணை தெரிவிக்கும் 20,000-க்கு மேற்பட்ட கடிதங்கள் இன்று காலை கோலாலும்பூர் மாநராட்சி மன்றத்(டிபிகேஎல்) தலைமையகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.
பக்காத்தான் ரக்யாட் எம்பிகள் ஏற்பாடு செய்திருந்த கண்டனப் பேரணியின் ஒரு பகுதியாக இந்த ஆட்சேபனை தெரிவிக்கும் கடிதங்கள் டிபிகேஎல்-லிடம் ஒப்படைக்கும் நிகழ்வு அமைந்திருந்தது.
பேரணி மக்கள் தலைவர்களைச் சந்திக்கும் ஒரு நிகழ்வு என்று கூறப்பட்டிருந்தாலும் அதில் கலந்துகொள்ள சுமார் 500 குடியிருப்பாளர்களும் ஆதரவாளர்களும் டிபிகேஎல் நுழைவாயிலில் திரண்டனர். சொத்துவரியை 300 விழுக்காடு உயர்த்தும் முடிவு கைவிடப்பட வேண்டும் என்றும் அவர்கள் உரக்க முழக்கமிட்டனர்.
கூட்டரசு பிரதேசத்தின் பக்காத்தான் எம்பிகள் அனவருமே அங்கிருந்தனர்.
ஆட்சேபணைக் கடிதங்களை டிபிகேஎல் அதிகாரிகள் பெற்றுக்கொண்டதாக லெம்பா பந்தாய் எம்பி நுருல் இஸ்ஸா அன்வார் தெரிவித்தார்..
சொத்து மதிப்பீட்டு வரி !! எதற்கு 300 விழுக்காடு உயர்வு ?? கோலாலபூரில் வசிப்பவர்களில் மலாய்காரர்கள் % ? சீனர்கள் % ? இந்தியர்கள் % ? மற்றவர்கள் % ? இதில் சீனர்களின் சொத்து மதிப்பு என்றால் 90 % அல்லது 95 % அவர்களுடையது . ஆகா , அரசாங்கத்தின் நோக்கம் சீனர்களின் அடிவயிற்றில் கை வைப்பது ? அந்த பணத்தை அப்படியே வேறு திசைக்கு திருப்புவது , இதற்குதான் இந்த வரி உயர்வு !! அட்னான் நமக்கு ராமாயணம் சொல்லித்தருகிறார் போலும் !!