ஷியாக்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கைகளை முடுக்கி விட்டிருக்கிறது. நாளை இரு ஷியாக்கள் பேராக் ஷியாரியா நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவர்.
ஷியா போதனைகள் அடங்கிய நூல்களை வைத்திருந்ததாக சூர் அஸா அப்துல் ஹாலிம், 41, முகம்மட் ரிட்சுவான் யூசுப், 31, ஆகிய இருவர்மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பேராக்கில் ஷியா போதனைகளைக் கொண்ட புத்தகங்களை வைத்திருப்பது குற்றமாகும். அவற்றுக்கு பேராக் பாத்வா மன்றம் தடை விதித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.