இன்று காலை கோலாலும்பூர் மாநராட்சி மன்றத்துக்கு(டிபிகேஎல்) வெளியில் கண்டனக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தவர்கள்மீது நடவடிக்கை எடுப்பது உறுதி என இன்ஸ்பெக்டர் ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்கார் கூறினார்.
சட்டப்படி அக்கூட்டம் பற்றி ஏற்பாட்டாளர்கள் போலீசுக்குத் தெரியப்படுத்தி இருக்க வேண்டும். அவர்கள் அதைச் செய்யவில்லை.
“2013 அமைதிப் பேரணிச் சட்டத்தை மீறியதற்காக ஏற்பாட்டாளர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றாரவர்.
கூட்டரசு பிரதேசத்தில் சொத்து மதிப்பீட்டு வரி மிக அதிகமாக உயர்த்தப்பட்டிருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க கோலாலும்பூரின் பக்காத்தான் எம்பிகள் அக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
டிபிகேஎல்.. ஜஜிபியை கேட்டுதான் வரி உயர்வை மக்களுக்கு தெரிவித்ததா.?